12th Tamil Solutions Chapter 5 தலைக்குளம் Book back Question

 12th Tamil Solutions Chapter 5.5 தலைக்குளம்

Tamilnadu state board Samacheerkalvi book 12th Tamil unit-6 Book back back Questions and answer Guide, notes,important Questions, model Question paper  Tamilnadu Samacheer guide 12th Tamil Solutions Chapter 5.5 தலைக்குளம்

  கற்பவை கற்றபின்

  Question 1.

  நீங்கள் இருக்கும் ஊரை வாழ ஏற்றதாய் மாற்ற மேற்கொள்ளும் வழிமுறைகளைத் தொகுக்க.

  Answer:

  • கழிவுநீர் வாய்க்கால் ஊரின் உள்ளே கழிவுநீர்த் தேங்காமல் செய்தல் வேண்டும்.
  • உயர்நிலை நீர்த்தேக்கத் தொட்டியினை (டுழகூ) மாதம் இருமுறை குளோரின் போட்டு சுத்தம் செய்தல் வேண்டும். காரணம் குடிக்கும் நீரால்தான் அனைத்து நோய்களும் உருவாகுவதால் கவனம் செலுத்த வேண்டும்.
  • வீட்டுக் குப்பைகளை பொது இடத்தில் கொட்டாமல், துப்பரவு பணியாளர்களிடம் தரம் பிரித்து ஒப்படைக்க வேண்டும்.
  • தெருவில் இடம் இருப்பின் வேப்பங்கன்று, புன்கன் கன்று இவற்றை நட்டு பராமரிக்கலாம்.
  • ஆடு, மாடுகளைத் தெருவில் இரவு நேரங்களில் கட்டி அசுத்தம் செய்யக் கூடாது.
  • தேவை இல்லாமல் தெருக்குழாய்களில் தண்ணீரைத் திறந்து விடுதல் கூடாது.
  • தெருக்குழாய்களிலேயே குளிப்பது, துணி துவைப்பது கூடாது.
  • சாலையோரங்களில், வெளியிடங்களில் மலம் கழிக்கக்கூடாது. ஏனெனில் மலம் கழிப்பதால்தான் மிகத் தொற்று நோய்கள் பரவுகிறது எனப் புரிந்து கொள்ள வேண்டும்.
  • பொது நலம் காக்கும் எண்ணம் இயல்பாக இருக்க வேண்டும்.
  • மேலும், தெருக்களில் எதையும் எரிப்பதைத் தவிக்க வேண்டும்.
  • சுத்தம் சோறு போடு என்று எண்ண வேண்டும். – சுற்றுப்புறமே சுகாதாரம்.

  Question 2.

  கடந்த முப்பது ஆண்டுகளாக உங்கள் குடும்பம் வாழ்ந்த வீட்டினைப் பற்றியும் சுற்றுச்சூழலில் ஏற்பட்ட மாற்றங்களைப் பற்றியும் பெரியோர்களிடம் அறிந்து வகுப்பறையில் பகிர்ந்து கொள்க.

  Answer:

  மாணவர்களே வணக்கம், வாழ்த்துக்கள்!

  • நாங்கள் முப்பது ஆண்டுகளாக வாழ்ந்திருந்த வீடும் – சுற்றுச்சூழலில் ஏற்பட்ட மாறுதல்கள் பற்றி நான் கேட்டு அறிந்து கொண்டவற்றை உங்களிடம் பகிர்ந்து கொள்ளப் போகிறேன்.
  • பண்புடையவர்களால்தான் இன்னும் இவ்வுலகம் வாழ்ந்து கொண்டிருக்கிறது என்று சான்றோர் கூறுவர்.
  • நல்லார் ஒருவர் உளறேல் அவர் பொருட்டு எல்லார்க்கும் பெய்யும் மழை – என்பது போல நல்லவர்களால் தான் மழை பொழியும்.
  • உள்ளத்தால் (ஒருவன்) பொய்யாது ஒழுகின் உலகத்தார் உள்ளத்துள் எல்லாம் உளன்.
  • மேற்கண்ட பொன் மொழிகளுக்கு ஏற்ப என் குடும்பத்தார், என் தாத்தா, பாட்டி, அப்பா, அம்மா அனைவருமே நல்லொழுக்கத்துடன் வாழ்ந்தவர்கள்.
  • அன்புடையவர்கள், புறம் பேசாதவர்கள், பொய் பேசாதாவர்கள், ஒப்புரவு உடையவர்கள், உண்டை விளம்பிகள் என எல்லா நற்குணங்கள் பெற்றவர்களாக வாழ்ந்திருக்கிறார்கள்.
  • அவர்களின் வழித்தோன்றலாகிய எங்களை ஊதில் அனைவரும் அன்புடன் நடத்துவர்.
  • உயிர்களிடத்து அன்பு வேணும் – என்னும் கொள்கையோடு வாழ்ந்ததால் ஊர் மக்களும் எங்கள் குடும்பத்தையே எடுத்துக்காட்டாகக் கொண்டு வாழ்ந்து வருகின்றனர்.
  • வாழ்வது ஒருமுறை வாழ்த்தட்டும் தலைமுறை.

  எனவே, மாணவச் செல்வங்களே நீங்கள் பிறர் விரும்புமாறு நல்லதை செய்து நலமோடு வாழுங்கள்.

  பாடநூல் வினாக்கள்

  நெடுவினா

  Question 1.

  “கிராமங்கள் தங்கள் முகவரியை இழந்து வருகின்றன” – இது குறித்து உங்கள் கருத்தை விவரிக்க.

  Answer:

  முன்னுரை:

  • மக்கள் தொகைப் பெருக்கம், நாகரீக வளர்ச்சி, புலம்பெயர்வு, தலைமுறை மாற்றம் இதன் விளைவாக கிராமங்கள் தங்கள் முகவரியை இழக்கின்றன.

  நகரத்தை நோக்கிச் செல்ல காரணம் :

  • இயற்கையோடு இயைந்து வாழ்ந்த நம் தலைமுறையினர் காலமாற்றத்தாலும், பல்வேறு காரணங்களாலும் கிராமத்தைவிட்டு நகரத்தை நோக்கி நகர்கின்றனர்.
  • பெரும்பாலும் கிராமங்களின் செயல்பாடுகள் அனைத்தும் கையேடு வாழ்க்கை போன்றது.
  • அங்கு கடினமான உழைப்பும், விவசாயமும் தவிர பிற தொழில் சார்ந்த வளர்ச்சி காணப்படுவதில்லை.
  • முறையான தொலைதொடர்பு, மருத்துவ வசதி சுகாதார அமைப்பு காண்ப்படுவதில்லை.
  • இந்தியாவில் 57 மில்லியன் குழந்தைகள் ஊட்டச்சத்துக் குறைபாடு உள்ளனர். இவர்களில் பெரும்பாலும் கிராமங்களில் வசிப்பவரே.
  • இன்றும் சில கிராமங்களில் கோயில் நுழைவு தீண்டாமை, சாதி அமைப்பு, மதக்கலவரம் போன்ற சமூக விரோதச் செயல்கள் நடைபெறுகிறது.
  • நகரத்திலோ எந்தவித பாகுபாடு இல்லாமல் சமவாய்ப்போடு வாழ இயலுவதால் நகரத்தை நோக்கி புலம் பெயர்கின்றனர்.
  • மிகச்சரியான உள்கட்டமைப்புடன் கூடிய தரமானக் கல்வி. போதிய ஆசிரியர்கள் இல்லாத காரணத்தால் நகர வாழ்க்கையை நோக்கி இடம் பெயர்கின்றனர்.

  அடிப்படை வசதியை நோக்கி நகர்வு :

  • (i) வறுமை, கல்வியில் பின்னடைவு, குழந்தைத் தொழிலாளர்கள் போன்றவை இன்றும் கிராமங்களில் காண முடிகிறது.
  • (ii) மின்சாரம், பேருந்து வசதி, தொழிற்சாலை போன்ற அடிப்படை வசதிகள் இல்லாத காரணத்தால் நகர வாழ்க்கையை நாடுகின்றனர்.
  • (iii) சாதிப் பாகுபாடு இல்லாமல் தரமான கல்வியோடு தொழிற்கல்வி, போட்டித்தேர்வை எதிர்கொள்ளும் பயிலகம், மின்னணு போன்ற நிறுவனங்கள் நகர்ப்புறத்தில் மேலோங்கி வருவதால் கிராமங்களை மக்கள் வெறுக்கின்றனர்
  • (iv)  இன்று நகரம் என்பது கிராமத்தைவிட பெரிய மனித குடியிருப்பு உள்ளதாக அமைகிறது. மக்கள் தொகைப் பெருக்கத்தால் வங்கிகள், வணிக நிறுவனங்கள் மேலும் வளர்ச்சியடைகிறது.

  முடிவுரை :

  • இத்தகைய காரணங்களால் கிராமங்களை விட்டு மக்கள் நகர்ப்புறம் நோக்கிச் செல்கின்றனர். இதனால் கிராமங்கள் தங்கள் அடையாளங்களை இழந்து முகவரியற்று கதியின்றி அமைகிறது.

  கூடுதல் வினாக்கள்

  பலவுள் தெரிக

  Question 1.

  ‘தலைக்குளம்’ என்னும் கதையின் ஆசிரியர்

  அ) பீர்முகமது

  ஆ) தோப்பில் முகமது மீரான்

  இ) அப்துல் ரகுமான்

  ஈ) ஜெயகாந்தன்

  Answer:

  ஆ) தோப்பில் முகமது மீரான்

  Question 2.

  ‘தலைக்குளம்’ என்னும் கதை இடம்பெற்றுள்ள சிறுகதைத் தொகுப்பு

  அ) துறைமுகம்

  ஆ) கூனன் தோப்பு

  இ) சித்தன் போக்கு

  ஈ) ஒரு குட்டித் தீவின் வரைபடம்

  Answer:

  ஈ) ஒரு குட்டித் தீவின் வரைபடம்


  Question 3.

  தோப்பில் முகமது மீரான் பிறந்த மாவட்டம் ………….. ஊர் …………. ஆண்டு ………

  அ) கன்னியாகுமரி, தேங்காய்ப்பட்டணம், 1944.

  ஆ) தஞ்சாவூர், உத்தமதானபுரம், 1942.

  இ) சென்னை , மயிலாப்பூர், 1940.

  ஈ) திருவாரூர், வலங்கைமான், 1943.

  Answer:

  அ) கன்னியாகுமரி, தேங்காய்ப்பட்டணம், 1944.


  Question 4.

  தோப்பில் முகமது மீரானின் படைப்புகள் வெளிவரும் மொழிகள்

  அ) தமிழ், ஆங்கிலம்

  ஆ) தமிழ், இந்தி

  இ) தமிழ், கன்ன டம்

  ஈ) தமிழ், மலையாளம்

  Answer:

  அ) தமிழ், ஆங்கிலம்

  Question 5.

  தோப்பில் முகமது மீரான் ‘சாய்வு நாற்காலி’ என்னும் புதினத்திற்காகச் சாகித்திய அகாதெமி விருதினைப் பெற்ற ஆண்டு

  அ) 1994

  ஆ) 1997

  இ) 1999

  ஈ) 2001

  Answer:

  ஆ) 1997


  Question 6.

  தமிழக அரசின் விருது பெற்ற தோப்பில் முகமது மீரான் படைப்புகள்

  அ) துறைமுகம், கூனன்தோப்பு

  ஆ) சாய்வு நாற்காலி, துறைமுகம்

  இ) ஒரு குட்டித் தீவின் வரைபடம்

  ஈ) கூனன்தோப்பு, சாய்வுநாற்காலி

  Answer:

  அ) துறைமுகம், கூனன்தோப்பு

  Question 7.

  பொருத்திக் காட்டுக.

  அ) உம்மா – 1. அப்பா

  ஆ) வாப்பா – 2. அம்மா

  இ) ஏச்சு – 3. படித்துறை

  ஈ) கடவு – 4. திட்டுதல்

  அ) 2, 1, 3, 4

  ஆ) 4, 3, 2, 1

  இ) 2, 3, 1, 4

  ஈ) 3, 2, 1, 4

  Answer:

  அ) 2, 1, 3, 4

  Question 8.

  பொருத்திக் காட்டுக.

  அ) புதுமைப்பித்தன் – 1. மலைவெடிப்பு

  ஆ) சண்முகசுந்தரம் – 2. சூரிய வெப்பம்

  இ) ஜெயகாந்தன் – 3. அஞ்சிய

  ஈ) தி.ஜானகிராமன் – 4. விரைவு

  உ) தோப்பில் முகமது மீரான் – 5. நெல்லைத்தமிழ்

  அ) 4, 5, 3, 2, 1

  ஆ) 5, 4, 3, 2, 1

  இ) 3, 2, 1, 5, 4

  ஈ) 2, 3, 4, 5, 1

  Answer:

  ஆ) 5, 4, 3, 2, 1

  Question 9.

  சரியான கூற்றுகளைக் கண்டறிக.

  i) கி. ராஜநாராயணன் கோவில்பட்டி வட்டாரத் தமிழைப் பயன்படுத்திப் படைத்தார்.

  ii) தம்முடைய வட்டார எழுத்திற்கு அவர் ‘கரிசல் இலக்கியம்’ என்று பெயரிட்டார்.

  iii) சிறுகதைகள் வட்டாரம் சார்ந்து தொகுக்கப்பட்டுத் ‘தஞ்சைக் கதைகள்’ என்பது போன்று வெளியீடு பெறுகின்றன.

  அ) i, ii சரி

  ஆ) ii, iii சரி

  இ) iii மட்டும் சரி

  ஈ) மூன்றும் சரி

  Answer:

  ஈ) மூன்றும் சரி

  Question 10.

  தலைக்குளம் கதையின் கருப்பொருள்

  அ) கிராமங்கள் மக்கள் மகிழ்ச்சியான வாழ்க்கை வாழ்வதற்கு ஏற்ற இடமாக இருந்து பின்னர் நகரமாக மாறியதைப் பற்றிப் பேசுவது.

  ஆ) தனக்கு உதவி செய்த மனிதனை தேடிக் கண்டுபிடித்து நன்றி பாராட்டுவது.

  இ) பெண்களின் அவலநிலையும் ஆண்களின் அடக்குமுறையும்.

  ஈ) இறந்து போன மனிதனின் சிறப்புகளைப் பேசுவது.

  Answer:

  அ) கிராமங்கள் மக்கள் மகிழ்ச்சியான வாழ்க்கை வாழ்வதற்கு ஏற்ற இடமாக இருந்து பின்னர் நகரமாக மாறியதைப் பற்றிப் பேசுவது.

  Post a Comment

  Previous Post Next Post

  POST ADS1

  POST ADS 2