Tamilnadu Samacheer Kalvi 12th Tamil Solutions Chapter 6.4 மெய்ப்பாட்டியல்

Tamilnadu Samacheer Kalvi 12th Tamil Solutions Chapter 6.4 மெய்ப்பாட்டியல்

கற்பவை கற்றபின்

Question 1.

நீவிர் பார்த்த திரைப்படம் ஒன்றில், வெளிப்பட்ட மெய்பாடுகள் குறித்து எழுதுக.

Answer:

 • திரைப்பட உலகில், கலை வெளிப்பாட்டிற்காகவே தயாரிக்கப்பட்ட படங்களில் தில்லானா மோகனாம்பாள் போன்ற ஒரு படத்தைக் காவியமாகவே மக்கள் பார்க்கின்றனர். இப்படத்தில் நடிப்புக்கலையில் பிரசித்திப் பெற்ற ஜோடிகளான சிவாஜி – பத்மினி இணை நவரசத்தையும் வெளிப்படுத்தும் காட்சிகளில் நலந்தானா பாடல் காட்சி மெய் மயக்கச் செய்துவிடும்.
 • (i) நலந்தானா, நலந்தானா, உடலும் உள்ளமும் நலந்தானா என்ற பாடல் காட்சியில் பத்மினியின் கண்களில் எண்வகை மெய்ப்பாடுகளையும் தாண்டிய ஒரு வெளிப்பாடு, அவரது புருவம் தவிக்கும் பாவனை எழுத்தில் விவரிக்க இயலாது.
 • (ii) இந்தப் பெண்பட்ட பாட்டை யார் அறிவார் – என்ற பாடல் காட்சியில் கண்களில் பனிக்கும் கண்ணீர் அழுகையை நமக்கிடையே வரவழைக்கும்.
 • (iii) சிவாஜியின் புண்பட்டகைகளை துண்டு மறைத்திருக்கும். தனது முந்தானையால் விசிறிவிட்டுப் பார்க்கும் பத்மினியின் பார்வையில் வெளிப்படும் அச்சவுணர்வு நம்மைச் சிலிர்க்க வைக்கும்.

திரைப்படம் சொல்லாத கதையுமில்லை

கதை சொல்லாத காதலுமில்லை.

Question 2.

எண்வகை மெய்ப்பாடுகளுக்கு ஏற்ற திரையிசைப் பாடல்களின் தொகுப்பு ஒன்றை உருவாக்குக.

Answer:

எண்வகை மெய்ப்பாடுகள்:

நகை, அழுகை, இளிவரல், மருட்கை , அச்சம், பெருமிதம், வெகுளி, உவகை

பாடநூல் வினாக்கள்

குறுவினா

Question 1.

எண்வகை மெய்ப்பாடுகள் யாவை?

Answer:

நகை (சிரிப்பு)

அழுகை

இளிவரல் (சிறுமை)

மருட்கை (வியப்பு)

அச்சம் (பயம்)

பெருமிதம் (பெருமை)

வெகுளி (சினம்)

உவகை (மகிழ்ச்சி)

என்பன எண்வகை மெய்ப்பாடுகளாகும் – தொல்காப்பியர்.

சிறுவினா

Question 1.

ஏதேனும் இரண்டு மெய்ப்பாடுகள் தோன்றுவதற்கான சூழ்நிலையைக் கற்பனையாகப் படைக்க.

Answer:

வியப்பு :

 • நீண்ட நாளாக எனக்கு கால் முட்டியில் வலி தீரவில்லை . என் உறவுக்காரர் பக்கத்து ஊர் தர்காவில் மௌலவி ஒருவர் ஓதுகிறார். உடல் நோயெல்லாம் தீர்ந்து விடுகிறது போய் பார் என்றார். நம்பிக்கையோடு சென்றேன். வரிசையில் நின்றேன். என் முறை வந்தது. ஒரே வியப்பு! அழுகையும் வந்தது. அங்கே ஓதுகின்ற மௌலவி என் வாப்பா (தந்தை). வெட்கமும் வேதனையும் வந்தது. வாப்பாவிடம் இப்படியொரு மகத்துவமா!

பெருமை :

 • 2004ஆம் ஆண்டு கடலூரில் சுனாமியால் பாதிக்கப்பட்டு தன் தாய் தந்தையரை இழந்து அனாதையாக அரசுக் காப்பகத்தில் சேர்க்கப்பட்டாள். அந்தப் பெண் குழந்தையை மாரியப்பன் என்ற உடற்கல்வி ஆசிரியர் இனங்கண்டு அரசு உதவியோடு தன் இல்லத்திற்கு அழைத்துவந்து தன் குழந்தை போல் வளர்த்தார். கல்வியோடு சேர்ந்து கால் பந்திலும் அந்தப் பெண்ணை ஈடுபடுத்தினார். பட்டம் முடித்த அந்தப் பெண் கால் பந்தில் முழுக் கவனம் செலுத்தி ஆசிய அளவில் நடைபெற்ற கால்பந்துப் போட்டியில் இந்திய அணி சார்பில் விளையாடி வெற்றி பெற்றாள். தன் தாய் தந்தையரை இழந்தாலும் வளர்ப்புத் தந்தையால் அடையாளம் கண்டு அவருக்கும் கடலூர் மாவட்டத்திற்கும் பெருமை சேர்த்தாள்.

கூடுதல் வினாக்கள்

பலவுள் தெரிக

Question 1.

பொருத்திக் காட்டுக.

அ) நகை – 1. பெருமை

ஆ) இளிவரல் – 2. வியப்பு

இ) மருட்கை – 3. சிறுமை

ஈ) பெருமிதம் – 4. சிரிப்பு

அ) 4, 3, 2, 1

ஆ) 3, 4, 1, 2

இ) 2, 1, 3, 4

ஈ) 4, 2, 1, 3

Answer:

அ) 4, 3, 2, 1

Question 2.

வெகுளி, உவமை – முதலிய சொற்களின் பொருள் முறையே ………….. என்பதாகும்.

அ) சினம், மகிழ்ச்சி

ஆ) சிறுமை, சிரிப்பு

இ) வியப்பு, பெருமை

ஈ) மகிழ்ச்சி , சினம்

Answer:

அ) சினம், மகிழ்ச்சி

Question 3.

தொல்காப்பியர் குறிப்பிடும் மெய்ப்பாடு.

அ) ஆறு

ஆ) ஏழு

இ) எட்டு

ஈ) ஒன்பது

Answer:

இ) எட்டு

Question 4.

‘சொற்கேட்டார்க்குப் பொருள் கண்கூடாதல்’ என்று கூறிய உரையாசிரியர்

அ) நச்சினார்க்கினியர்

ஆ) சேனாவரையர்

இ) பேராசிரியர்

ஈ) அடியார்க்கு நல்லார்

Answer:

இ) பேராசிரியர்

Question 5.

கவி கண்காட்டும் என்று கூறிய உரையாசிரியர்

அ) நச்சினார்க்கினியர்

ஆ) சேனாவரையர்

இ) பேராசிரியர்

ஈ) அடியார்க்கு நல்லார்

Answer:

இ) பேராசிரியர்

Question 6.

பேராசிரியர் என்பார் …………….. உரையாசிரியர் ஆவார்.

அ) நன்னூல்

ஆ) சிலப்பதிகாரம்

இ) யாப்பருங்கல

ஈ) தொல்காப்பிய

Answer:

ஈ) தொல்காப்பிய

Question 7.

நகை, அழுகை, இளிவரல், மருட்கை, அச்சம், பெருமிதம், வெகுளி, உவகை – இச்சொற்களுக்குரிய இலக்கணக் குறிப்பு

அ) பண்புத்தொகைகள்

ஆ) வினைத்தொகைகள்

இ) தொழிற்பெயர்கள்

ஈ) இவற்றில் எதுவுமில்லை

Answer:

இ) தொழிற்பெயர்கள்

Question 8.

‘ஈட்டுபுகழ் நந்தி பாணநீ – என்னும் நந்திக்கலம்பக பாடலில் இடம்பெறும் மெய்ப்பாடு

அ) நகை

ஆ) அழுகை

இ) மருட்கை

ஈ) வெகுளி

Answer:

அ) நகை

Question 9.

பாணனின் பாடலைக் கேட்டவர்களின் கூற்றாகத் தலைவி கூறுவனவற்றைப் பொருத்திக் காட்டுக.

அ) அன்னை – 1. பாணன்

ஆ) தோழி – 2. நரி

இ) பிறர் – 3. நாய்

ஈ) தலைவி – 4. பேய்

அ) 4, 3, 2, 1

ஆ) 3, 2, 1, 4

இ) 2, 1, 4, 3

ஈ) 1, 4, 2, 3

Answer:

அ) 4, 3, 2, 1

Question 10.

‘ஐயோ எனின் யான் புலி அஞ்சுவலே’ என்னும் புறநானூற்று அடிகளில் இடம்பெறும் மெய்ப்பாடு

அ) நகை

ஆ) அழுகை

இ) வெகுளி

ஈ) இளிவரல்

Answer:

ஆ) அழுகை

Question 11.

‘தொடப்பாடு ஞமலியின் இடர்ப்படுத்து இரீஇய’ என்னும் புறநானூற்று அடிகளில் இடம்பெறும் சேரன் கணைக்கால் இரும்பொறை குறித்தான மெய்ப்பாடு

அ) நகை

ஆ) இளிவரல்

இ) மருட்கை

ஈ) சினம்

Answer:

ஆ) இளிவரல்

Question 12.

‘அமரர்க்கு அரசன் தமர்வந்து ஈண்டி’ என்று கண்ணகி வானூர்தியில் வானுலகு சென்ற காட்சியைக் காணும் குன்றவர்களின் மெய்ப்பாடு

அ) இளிவரல்

ஆ) உவகை

இ) மருட்கை

ஈ) அச்சம்

Answer:

இ) மருட்கை

Question 13.

‘மையல் வேழமம் மடங்களின் எதிர்தர’ என்னும் குறிஞ்சிப்பாட்டு அடிகளில் இடம்பெறும் மெய்ப்பாடு

அ) நகை

ஆ) அழுகை

இ) அச்சம்

ஈ) பெருமிதம்

Answer:

இ) அச்சம்

Question 14.

‘உறுசுடர் வாளோடு ஒருகால் விலங்கின்’ என்னும் புறப்பொருள் வெண்பாமாலை அடிகளால் உணர்த்தப்படும் மெய்ப்பாடு

அ) அச்சம்

ஆ) பெருமிதம்

இ) வெகுளி

ஈ) உவகை

Answer:

ஆ) பெருமிதம்

Question 15.

‘உறுதுப்பு அஞ்சாது, உடல்சினம் செருக்கி’ என்னும் புறநானூற்று அடிகளால் பாண்டியர் நெடுஞ்செழியனின் அறியலாகும் மெய்ப்பாடு

அ) அச்சம்

ஆ) பெருமிதம்

இ) வெகுளி

ஈ) உவகை

Answer:

இ) வெகுளி

Question 16.

‘மண்டல மதியமன்ன மாசறு மகத்தினாளுந் …. ‘ என்ற அடிகளில் வெளிப்படும் குந்தியின் வெளிப்பாடு

அ) அச்சம்

ஆ) பெருமிதம்

இ) வெகுளி

ஈ) உவகை

Answer:

ஈ) உவகை

Question 17.

பொருத்திக் காட்டுக

அ) பாணன் – 1. உவகை

ஆ) கணைக்காலிரும்பொறை – 2. வெகுளி

இ) பாண்டியன் நெடுஞ்செழியன் – 3. இளிவரல்

ஈ) குந்தி – 4. நகை

அ) 4, 3, 2, 1

ஆ) 2, 3, 1, 4

இ) 3, 1, 4, 2

ஈ) 2, 4, 1, 3

Answer:

அ) 4, 3, 2, 1

Question 18.

‘உய்ப்போன் செய்தது காண்போர்க்கு எய்துதல் மெய்ப்பா டென்ப மெய்யுணர்ந் தோரே’ – என்று குறிப்பிடும் நூல்

அ) தொல்காப்பியம்

ஆ) நன்னூல்

இ) நம்பிக்கைப்பொருள்

ஈ) செயிற்றியம்

Answer:

ஈ) செயிற்றியம்

Question 19.

தொல்காப்பியத்தில் மெய்ப்பாட்டியல் ………………… அதிகாரத்தில் இடம்பெற்றுள்ளது.

அ) எழுத்து

ஆ) சொல்

இ) பொருள்

ஈ) யாப்பு

Answer:

இ) பொருள்

Question 20.

தமிழில் கிடைக்கப் பெற்ற முதல் இலக்கண நூல்

அ) தொல்காப்பியம்

ஆ) நன்னூல்

இ) தொன்னூல் விளக்கம்

ஈ) புறப்பொருள் வெண்பாமாலை

Answer:

இ) தொன்னூல் விளக்கம்

Question 21.

தமிழ்மொழியின் அமைப்பை விதிகளாக்கி விளக்குவதோடு தமிழ்க் கவிதையியலின் நுட்பங்களையும் பேசும் நூல்

அ) திருக்குறள்

ஆ) நாலடியார்

இ) தொல்காப்பியம்

ஈ) யாப்பருங்காலக்காரிகை

Answer:

இ) தொல்காப்பியம்

Question 22.

தொல்காப்பியம் முழுமைக்கும் உரை எழுதியவர்

அ) இளம்பூரணர்

ஆ) சேனாவரையர்

இ) பேராசிரியர்

ஈ) நச்சினார்க்கினியர்

Answer:

அ) இளம்பூரணர்

Question 23.

தொல்காப்பியத்தினை இயற்றியவர்

அ) அகத்தியர்

ஆ) தொல்காப்பியர்

இ) சமணமுனிவர்

ஈ) பவணந்தி முனிவர்

Answer:

ஆ) தொல்காப்பியர்

குறுவினா

Question 1.

மெய்ப்பாடு என்றால் என்ன?

Answer:

 • இலக்கியத்தைப் படிக்கின்றபோது அதன் பொருளை ஆழப்படுத்தும் வகையில் காட்டப்படும் உணர்ச்சி வெளிப்பாட்டு சுவையே மெய்ப்பாடு என்பர். ‘சொற்கேட்டார்க்குப் பொருள் கண் கூடாதல்
 • கவி கண் காட்டும்’ என்று உரையாசிரியர், பேராசிரியர் குறிப்பிடுகிறார்.

Question 2.

தொல்காப்பியரைத் தமிழ்ச் சான்றோர் எவ்வாறு போற்றுகிறார்?

Answer:

 • ‘ஒல்காப் பெரும்புகழ்ந்த தொல்காப்பியன்’ என்று போற்றுகிறார்கள்.

Question 3.

தொல்காப்பியம் முழுமைக்கும் உரையெழுதியவர் யார்?

Answer:

 • ‘இளம்பூரணர்’ நூல் முழுமைக்கும் உரை எழுதியவர் ஆவார்.

நெடுவினா

Question 1.

எண்வகை மெய்பாடுகளை இலக்கியச் சான்றுடன் விளக்குக.

Answer:

நகை :

ஈட்டுபுகழ் நந்தி பாணநீ எங்கையர் தம்

வீட்டிருந்து பாட விடிவளவும்…….

 • எனும் பாடல்களில் பாணனின் குரலை தலைவி எள்ளி நகையாடுகிறாள்.
 • நீ இரவு முழுவதும் பாடியதை என் தாய் பேய் என்றாள், பிறர் நரி என்றார், தோழி நாய் என்றாள். ஆனால் நானோ நீ என்றேன்.

அழுகை :

ஐயோ எனின் யான் புலி அஞ்சுவலே

அணைத்தனன் கொளினே அகன் மார்பு……

 • என்ற பாடலடிகளில் காட்டில் புலியோடு போராடி இறந்த தலைவனைப் பற்றி தலைவி துயரம் கொள்வதாக உள்ளது.
 • தலைவன் உடலைப் பார்த்து ஐயோ என்று கதறினால், புலி வந்துவிடுமோ என்று அஞ்சுகிறாள்.
 • தூக்கிச் செல்லலாம் என்றால் ‘உனக்கு அகன்ற மார்பு உன்னைத் தூக்க இயலாது’ என்று துன்புறுகிறாள்.

இளிவரல் (சிறுமை) :

தொடர்ப்படு ஞமலியின் இடர்ப்படுத்து இரீஇய

கேளல் கேளிர் வேளாண் சிறுபதம்……

 • என்ற பாடலில் சேரனுக்கு ஏற்பட்ட சிறுமையை எண்ணிப் பாடுவதாக அமைகிறது. நாயைச் சங்கிலியால் கட்டி வைத்து துன்புறுத்தியது போல என்னைத் துன்புறுத்தினர். சிறையிலிட்ட உன் உதவியால் வந்த தண்ணீரை நான் இரந்து உண்ணமாட்டேன்.

மருட்கை (வியப்பு) :

அமரரர்க்கு அரசன் தமர்வந்து ஈண்டி அவள்

காதல் கொழுநனைக் காட்டி….

 • எனும் வரும் பாடல் அடிகளில் கண்ணகி கோவலனோடு சென்ற காட்சி வியப்பை ஏற்படுத்துகிறது. இந்திரன் கோவலனோடு வந்து பத்தினியாகிய கண்ணகியை விண்ணுக்கு அழைத்துச் சென்ற வியப்பான காட்சி.

அச்சம் :

மையல் வேழம் மடங்கலின் எதிர்தர

உய்வு இடம் அறியேம்…..

 • எனும் இப்பாடலில் அச்சம் வெளிப்படுகிறது. மதம் பிடித்த யானை மரங்களை முறித்தது; கார்மேகம் இடிப்பது போல் முழங்கியது. உயிர் பிழைப்பதற்கு வேறு இடம் இல்லாமல் மகளிர்தம் கை வளையல் ஒலிக்க மயில் போல் நடுங்கி நின்றார்கள்.

பெருமிதம் (பெருமை) :

உறுசுடர் வாளோடு ஒருகால் விலங்கின

சிறு சுடர் முற்பேர் இருளாங் கண்டாய்…..

 • இப்பாடலில் தனியொரு வீரன் பெரும் படையை எதிர்த்த பெருமையை விளக்குகிறது. ஒளிமிக்க வேலினையும், தேன் நிறைந்த மாலையும் உடைய வேந்தனே! வாளுடன் பெரும் படையைத் தடுப்பேன். அப்பெரும்படை சிறுவிளக்கின் முன் இருள் ஓடுவது போல் ஓடும்.

வெகுளி (சினம்) :

உறுதுப்பு அஞ்சாது, உடல் சினம் செருக்கிச்

சிறுசொல் சொல்லிய சினங்கெழு வேந்தரை

 • என்ற பாடல் அடிகளில் நெடுஞ்செழியனின் சினம் கூறப்படுகிறது. தன்னை இளையவன் என்று எள்ளிய வேந்தர்களை சிதறி ஓடச் செய்து முரசையும் கைப்பற்றுவேன் என்று செழியன் சினங்கொள்கிறார்.

உவகை (மகிழ்ச்சி) :

மண்டல மதியமன்ன மாசறு முகத்தினாளுந்

திண்டிறன் மருகன் ……

 • இப்பாடலில் மழை மேகத்தைக் கண்ட மயில் போல மகிழ்ச்சி காணப்படுகிறது. குந்தி தன் திறன் மிக்க மருமகன் கண்ணனைக் கண்ட காட்சி வெள்ளலைகள் நிறைந்த நீலக் கடலின் நீரை முகந்து வரும் மேகத்தைக் கண்ட தோகை மயில் போல மகிழ்ந்து வரவேற்றாள்.

Post a Comment

Previous Post Next Post

POST ADS1

POST ADS 2