8th Tamil unit 2 Assignment answer key - July 2021

8th Tamil unit 2 Assignment answer key - July 2021

ஒப்படைப்பு - விடைகள்

 வகுப்பு : 8

 பாடம்: தமிழ்    

இயல் - 2  -  ஈடில்லா இயற்கை 

                      பகுதி - அ

I ) ஒரு மதிப்பெண்வினா

1.வள்ளைப்பாட்டு எப்போது பாடப்படுகிறது?

அ) நெல் குத்தும்போது

ஆ) ஏற்றம் இறைக்கும்போது

இ) நாற்று நடும்போது 

ஈ) போரடிக்கும்போது

விடை : அ ) நெல்குத்தும்போது

2 புன்செய் என்பது எத்தகைய நிலப்பகுதி?

அ) வறண்ட களிமண் நிலம் 

ஆ.உவர்நிலம்

இ) நிறைந்த நீரால் பயிர்கள் விளையும் நிலம்

ஈ) குறைந்த நீரால் பயிர்கள் விளையும் நிலம்

விடை :  ஈ ) குறைந்த நீரால் பயிர்கள் விளையும் நிலம்

3. காங்கேய நாடு எந்த மண்டலத்தில் அமைந்துள்ளது?

அ) நடுமண்டலம்

ஆ) சோழ மண்டலம்

இதொண்டை மண்டலம்

ஈ) கொங்கு மண்டலம்

விடை : ஈ ) கொங்கு மண்டலம்

4. கீழ்க்காணும் தொடர்களில் 'வின்னம்' என்னும் பொருள்தரும் சொல் அமைந்த தொடரைத் தேர்ந்தெடுக்க.

அ) பழங்கள் கீழே கொட்டியதால் சேதமடைந்தன.

ஆ) பலத்த காற்றால் மரங்கள் ஒடிந்து விழுந்தன.

இ) மழையின் காரணமாகச் சாலைவெறிச்சோடிக் காணப்பட்டது.

ஈ) புயல்காற்றால் வீடுகளின் கூரைகள் மொத்தமாகப் பிரிந்து சரிந்தன.

விடை : அ ) பழங்கள் கொட்டியதால் சேதமடைந்தன.

5. செவ்விந்தியர்களின் நினைவுகளைச் சுமந்து நிற்பவை எவை?

அ) நறுமணம் மிகுந்த மலர்கள்

ஆ) பசும்புல்வெளிகளின் பனித்துளிகள்

இ) மட்டக் குதிரைகளின்உடல்சூட்டின் கதகதப்பு

ஈ ) பாலூறும் மரத்தில் இருந்து ஒழுகும் திரவம்

விடை : ஈ ) பாலூறும் மரத்தில் இருந்து ஒழுகும் திரவம்

6. சியாட்டல் எந்தப் பழங்குடி இனத்தைச் சேர்ந்தவர்

அ) அபார்ஜைன் பழங்குடியினர்

ஆ) அசாந்தி பழங்குடியினர்

இ) சுகுவாமிஷ் பழங்குடியினர்

ஈ) முபட்டி பழங்குடியினர்

விடை : இ ) சுகுவாமிஷ் பழங்குடியினர்

7. சியாட்டல் தன்னுடைய உடன்பிறப்புகளாக எவற்றைக் கருதுகிறார்?

அ) மரங்கள்

ஆ)ஆறுகள் 

இ) மலைகள் 

ஈ) விலங்குகள்

விடை : ஆ )  ஆறுகள்

8. கீழ்க்காணும் தொடர்களில் வினைமுற்றுச் சொல்லைக் கொண்ட தொடரைத்

தேர்ந்தெடுக்க.

அ) எழுதிய பையன் 

ஆ)கண்ணன் ஓடினான்

இ) சென்றவளவன் 

ஈ) மகிழ்ந்த மாலா

விடை :  ஆ ) கண்ணன் ஓடினான்

9. தேர்வுக்குச் சிறந்த முறையில் உன்னைத் தயார்படுத்திக்கொள்" இது எவ்வகைத் தொடர்?

அ)தெரிநிலை வினைமுற்றுத் தொடர்

 ஆ) ஏவல்வினைமுற்றுத் தொடர்

இ)வியங்கோள் வினைமுற்றுத் தொடர் 

ஈ) குறிப்பு வினைமுற்றுத் தொடர்

விடை :  ஆ ) ஏவல் வினைமுற்றுத்தொடர்.

10. மாடு வயலில் மேய்ந்தது

 -இத்தொடரிலுள்ள வினைமுற்று எது?

அ) மாடு      ஆ) வயல்

இ) புல்      ஈ)மேய்ந்தது

விடை :   ஈ ) மேய்ந்தது

பகுதி-ஆ

11. சிறுவினா

1.நெஞ்சத்தில் இரக்கம் இல்லாதவர் வெட்கப்படும்படி ஆறுசெய்த செயல் யாது?

 • நெஞ்சத்தில் இரக்கம் இல்லாதவர் வெட்கப் படுமாறு இடையறாது ஓடித் தன் உழைப்பைக் கொடையாகத் தருகிறது.

2.எந்தெந்தப் பகுதிகளில் வீசிய புயலால் சாலையில் சென்ற மக்கள் தடுமாறினர்?

 • ஆர்க்காடு முதல் மைசூர் வரை வீசிய புயலால் சாலைகளில் சென்ற மக்கள் தடுமாறித் தவித்தனர்.

3.எத்தகைய உணர்வுகளைக் காற்று சுமந்து நிற்பதாகச் சியாட்டல் கூறுகிறார்?

 • இந்தக் காற்றானது அனைத்து உயிர்களையும் காக்கிறது. இவ்வுணர்வுகளைச் சுமந்து நிற்கும்
 • காற்றின் இன்றியமையாமையை, நாங்கள் நிலத்தை விற்றுவிட நேர்ந்த பின்னரும் நீங்கள் மறக்கவே கூடாது.

4.காற்றைப் பாதுகாக்கவேண்டியதன் அவசியம் குறித்துச் சியாட்டல் கூறுவது யாது?

 •  நாங்கள் காற்றை மிகவும் மதித்துப் போற்றுபவர்கள். விலங்குகள், மரங்கள், மனிதர்கள் உள்ளிட்ட யாவற்றுக்கும் சுவாசித்தல் பொதுவானது. பொதுவான ஒரு காற்றையே இவை யாவும் சுவாசிக்கின்றன. எனவே காற்றைப் பாதுகாக்க வேண்டும்.

5.மனிதன் தன் சுயநலத்தால் தொலைத்து விட்டவையாக நீ கருதுவது யாது?

 1. மரங்கள் 
 2. ஆறுகள் 
 3. மலைகள் 
 4. குளங்கள் 
 5. சுத்தமான நீர் 
 6. சுத்தமான காற்று 

6. ஒரு செயல் நடைபெறுவதற்கு முதன்மையானவையாகத் தெரிநிலை வினைமுற்று காட்டுபவை எவை?

 செய்பவர்

கருவி 

நிலம் 

செயல் 

காலம் 

செய்பொருள் 

7.வியங்கோள் வினைமுற்றுவிகுதிகள் யாவை?

  க , இய , இயர் , அல்

 பகுதி -  இ

III. பெருவினா 

1.ஓடையின் பயன்களாக வாணிதாசன் கூறுவன யாவை?

ஓடையின் பயன்களாக வாணிதாசன் கூறுவன : 

 • நன்செய், புன்செய் நிலங்களுக்கு நீர்வளம் தந்து பயிர்களைச் செழிக்கச் செய்கிறது.
 •  விளைந்த பயிர்கள் மூலம் உணவு தந்து நாட்டின் வறுமையைப் போக்குகிறது.
 • குளர்ச்சியைத் தரும் புற்களுக்கு இன்பம் சேர்க்கின்றது.
 • நெஞ்சில் இரக்கம் இல்லாதவர்கள் வெட்கப்படுமாறு இடையறாது ஓடித் தன் உழைப்பைக் கொடையாகத் தருகிறது.

2.ஐம்பெரும் பூதங்களோடு கொள்ள வேண்டிய உறவுநிலை குறித்துச் சியாட்டல் கூறும் கருத்துகளைத் தொகுத்து எழுதுக.

நிலம்

 • எங்கள் கால்களைத் தாங்கி நிற்கும் இந்த நிலமானது எம்முடைய பாட்டன்மார்கள் எரிந்த சாம்பலால் ஆனதாகும். 
 • இந்நிலமே எங்கள் தாயாகும். எமது உறவு முறையாரின் வளமான வாழ்வால் ஆனதே இந்நிலமாகும்.
 • இதனை எங்கள் குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுப்பது போல் உங்கள் குழந்தைகளுக்கும் நீங்கள் சொல்லிக் கொடுங்கள் அப்போது தான் அவர்கள் இந்நிலத்தை மதிப்பார்கள்.

நீர் 

 • ஏரிகளில் பிரதிபலிக்கும் நினைவு எச்சங்கள், எம்மக்களின் வாழ்வியல் நிகழ்வுகளை நினைவு கூர்பவை. இந்த நீரின் முணுமுணுப்புகள் எம் பாட்டன்மார்களின் குரல்களே ஆகும்.
 • இந்த ஆறுகள் யாவும் எம் உடன் பிறந்தவர்கள். இவர்கள் தாம் எமது தாகத்தைத் தீர்க்கிறார்கள். எம்மக்களின் தோணிகளையும் இவர்களே சுமந்து செல்கின்றனர். குழந்தைகளுக்கு உணவளிக்கின்றனர்.
 • இங்குள்ள ஓடைகளிலும் ஆறுகளிலும் ஓடும் வனப்புமிகு நீரானது வெறும் தண்ணீரன்று; எமது மூதாதையரின் குருதியாகும். இவ்வாறு நீர்நிலைகள் குறித்துச் சியாட்டல் கூறியுள்ளார்.

காற்று 

 • எம்மக்கள் யாவரும் அமைதியான குளத்தின் முகத்தை முகந்து வரும் தென்றலின் இன்னோசையையும், நடுப்பகலில் பெய்யும் மழையால் எழும்மண்வாசனையையும், தேவதாரு
 • மரத்திலிருந்து பறக்கும் இலைகளின் மணத்தையும் நுகர்வதை விரும்புபவர்கள்.
 •  நாங்கள் காற்றை மதித்துப் போற்றுபவர்கள். விலங்குகள், மரங்கள், மனிதர்கள் உள்ளிட்ட யாவற்றுக்கும் சுவாசித்தல் பொதுவானது.
 • நீங்கள் சுவாசிக்கும் காற்று பற்றிச் சிந்தித்ததில்லை. காற்று அனைத்து உயிர்களையும் காக்கிறது.நாங்கள் நிலத்தை விற்றுவிட நேர்ந்த பின்னரும் காற்றின் இன்றிமையாமையை நீங்கள் மறத்தல் கூடாது.

வானம் 

 • இந்தப் பூமிக்கு அணுக்கமாக உள்ள வானத்தை விலை கொடுத்து வாங்க இயலாது எனச் சியாட்டல் கூறுகிறார்.

பகுதி-ஈ

IV.செயல்பாடு:

காடுகளைப் போற்றும் முழக்கத் தொடர்களைத்(5) தனித்தாளில் எழுதுக.

 • மாணவர்கள் தம் மனதில் படும் கருத்துகளை முழக்கத் தொடர்களாக எழுதுக.

Post a Comment

Previous Post Next Post

POST ADS1

POST ADS 2